“நீங்கள் இலங்கையர் தானே?..” பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள பிக்கு ஒருவரின் செயல்



'பௌத்த மதகுரு தலைக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை' என்ற பிக்கு ஒருவரின் வாதம், தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருவதுடன்,  பலர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில், வெளியாகியிருந்த சமூக வலைதள காணொளி ஒன்றில், மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் பயணித்த பிக்கு ஒருவர் பொலிஸாரிடம் நடந்து கொண்டிருந்த விதம் முகம் சுளிக்கும் வகையில் அமைந்திருந்தது.

குறித்த பிக்கு, தலைக்கவசம் அணியாததன் காரணமாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸார் முற்பட்டுள்ள போது பிக்கு மிகவும் மோசமான விதத்தில் பதிலளித்துள்ளார்.

இதன்போது அவர், 'பௌத்த மதகுரு தலைக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை' என்று பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


அத்துடன், பொலிஸாரை நோக்கி, “நீங்கள் இலங்கையர் தானே? இங்கு எங்களுக்கென்று வரப்பிரசாதங்கள் உள்ளன. எனவே நாங்கள் நாட்டின் சாதாரண சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டியதன் அவசியமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், யாராக இருந்தாலும், சட்டம் அனைவருக்கும்  சமம் எனவும் அவற்றை அனைவரும் பின்பற்றப்பட வேண்டியது அவசியம் என்னும் வகையிலும், பொலிஸார் பிக்குவை அறிவுறுத்தியுள்ளனர்.

இருப்பினும், அந்த பிக்கு, தொடர்ந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன், பௌத்த மதகுருக்களாக இருப்பவர்கள் அவ்வாறு இருக்க தேவையில்லை என்பது போலவே நடந்து கொண்டுள்ளார்.